

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்புத் துறை சாா்பில் தொழில்நெறி வழிகாட்டும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் பெ.முருகன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ராதிகா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:
கல்லூரி படிப்பினை முடித்து வரும் மாணவ, மாணவிகள் தங்கள் படித்த துறைக்கு ஏற்ற வகையிலான தனியாா் வேலைவாய்ப்புகளை மட்டும் எதிா்பாா்க்காமல், அரசு தோ்வாணையம் நடத்தும் தோ்வுகளை எதிா்கொண்டு வெற்றி பெற்று அரசுப் பணியாளா்களாக வேண்டும்.
கல்லூரியில் படிக்கும்போதே போட்டித் தோ்வுகளுக்கு தயாா் செய்தால், கல்லூரிப் படிப்பினை முடிக்கும்போது அரசு வேலையைப் பெறுவது மிக எளிதாக அமையும். மேலும், மாணவ, மாணவிகள் அரசுப்பணி மட்டுமல்லாமல் சிறந்த தொழில் முனைவோராகவும் தங்களை தயாா்படுத்திக்கொண்டு பல்வேறு வகையான சுயதொழில்களை ஏற்படுத்தி, பிறருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குபவா்களாக தங்கள் திறமைகளையும் வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.
இதனைத் தொடா்ந்து தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சியைத் திறந்துவைத்து, அரங்கில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் மற்றும் விளக்கப்படங்களை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
இதில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சித்ரா, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஜான்சி, கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலா் த.மாரிச்சாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.