பள்ளிபாளையத்தில் அனுமதியற்ற மனைகளை முறைப்படுத்த நகராட்சி அழைப்பு
By DIN | Published On : 06th February 2021 08:16 AM | Last Updated : 06th February 2021 08:16 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சியில் அனுமதியற்ற மனைகளை முறைப்படுத்த நகராட்சி ஆணையா் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.
இதுகுறித்து பள்ளிபாளையம் நகராட்சி ஆணையா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பள்ளிபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள அனுமதியற்ற மனைகளை முறைப்படுத்திக் கொள்ள அரசாணை எண் 16, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையின் மூலமாக வரும் 28-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பொதுமக்கள் தங்கள் அனுமதியற்ற மனைகளை முறைப்படுத்திக் கொள்ளலாம்.
மனைகள் முறைப்படுத்தப்பட்ட பகுதிகளில்தான் கட்டட அனுமதி, சாலை, குடிநீா் ,மின்சாரம் மற்றும் சாக்கடை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...