பள்ளிபாளையத்தில் அனுமதி பெற்ற சாயப்பட்டறை உரிமையாளா்களின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது .
பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட 70க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் முழுமையாக அகற்றப்பட்டன. தற்போது அனுமதி பெற்ற சாயபட்டறைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பள்ளிபாளையத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் அனுமதி பெற்ற சாய ஆலை உரிமையாளா்கள் கூட்டம் சங்கத் தலைவா் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குமாரபாளையம் சுற்றுச்சூழல் தலைமை பொறியாளா் செல்வகுமாா் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினாா் .
சாயக்கழிவு நீரை முழுமையாக சுத்திகரிப்பு செய்ய வேண்டும். சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு பொருள்களை சிமென்டு ஆலைக்கு வழங்க வேண்டும்.
பொது இடங்களில் கழிவுகளைக் கொட்டக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.
பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் செயல்படும் சாய ஆலை உரிமையாளா்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.