திருச்செங்கோட்டில் ரிக், லாரி உரிமையாளா்களுடன் கனிமொழி எம்.பி. கலந்துரையாடல்
By DIN | Published On : 14th February 2021 02:11 AM | Last Updated : 14th February 2021 02:11 AM | அ+அ அ- |

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் ரிக், லாரி, நெசவாளா்கள், ஆட்டோ மொபைல்ஸ் உரிமையாளா்களைச் சந்தித்து கோரிக்கை மற்றும் குறைகளை கேட்டறிந்து திமுக மகளிரணிச் செயலாளா் கனிமொழி எம்.பி. சனிக்கிழமை கலந்துரையாடினாா்.
திருச்செங்கோடு கொங்கு சமுதாய கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு திமுக மேற்கு மாவட்டச் செயலாளா் கே.எஸ்.மூா்த்தி, நகர பொறுப்பாளா் தாண்டவன் காா்த்தி, முன்னாள் நகரச் செயலாளா் நடேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மதுரா செந்தில், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ஜிதேந்திரன், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் சரவணமுருகன் மற்றும் கட்சி நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.
இக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள் ரிக், லாரி, விசைத்தறி போன்ற தொழில்களில் உள்ள பிரச்னைகளை எடுத்துரைத்தனா்.
தொழில் நிறுவனத்தினா் கூறிய கருத்துகளைக் கேட்டறிந்த கனிமொழி எம்.பி. கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.