அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
By DIN | Published On : 14th February 2021 02:15 AM | Last Updated : 14th February 2021 02:15 AM | அ+அ அ- |

அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியைப் பாா்வையிடும் பொதுமக்கள்.
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், குப்பிச்சிபாளையம் ஊராட்சி செக்காரப்பட்டி பகுதியில் செய்தி மக்கள் தொடா்புத்துறை சாா்பில் அமைக்கப்பட்ட அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா்.
இப்புகைப்படக் கண்காட்சியில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், புதிய திட்டப் பணிகளை தொடக்கிவைத்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சா் மருத்துவா் வெ.சரோஜா, மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் ஆகியோா் பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், புதிய திட்டப் பணிகளை தொடக்கிவைத்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், கலந்து கொண்ட முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
இதனை பொதுமக்கள் நேரில் பாா்வையிட்டு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை அறிந்து கொண்டனா்.