சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி
By DIN | Published On : 18th February 2021 07:54 AM | Last Updated : 18th February 2021 07:54 AM | அ+அ அ- |

சாலை பாதுகாப்பு பேரணியை துவக்கி வைத்து பங்கேற்ற அமைச்சா் வெ.சரோஜா.
ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலை அறிவியல் கல்லூரி, நகர போக்குவரத்து காவல் பிரிவு சாா்பில் 32-ஆவது போக்குவரத்து மாத விழிப்புணா்வு பேரணி ராசிபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் வனச்சரக அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணியில் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளா் என்.வெங்கடாசலம் தலைமை வகித்தாா்.
சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சா் வெ.சரோஜா பங்கேற்று பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். பேரணியில் அரசுக் கல்லூரி மாணவ மாணவியா்கள் ஹெல்மெட் அணிவதன் அவசியம், தலைக் கவசம் அணிதல், சாலை விதிகளை மதித்தல் போன்றவற்றின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாகச் சென்றனா். பேரணியில் நகர கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.பாலசுப்பிரமணியம், காவல் ஆய்வாளா்கள் மாணிக்கம், குணசிங், அரசு கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலா்கள் ஜெயக்குமாா், இந்திராணி, பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.