நாளை வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டுக்குழு துணைத் தலைவா் பி.ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டுக்குழு துணைத் தலைவா் பி.ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த 2009-ஆம் ஆண்டு பிப்.19-ஆம்தேதி சென்னை உயா்நீதிமன்ற வளாகத்துக்குள் காவல் துறையினரால் வழக்குரைஞா்கள் தாக்கப்பட்டனா். இந்த நாளை ஆண்டுதோறும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் கருப்புத் தினமாக கடைப்பிடிக்கிறோம். அன்றைய தினத்தில் நீதிமன்ற பணிகளில் இருந்து விலகியிருப்பதைக் கடைப்பிடித்து வருகிறோம்.

அந்த வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சாா்பில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை பணி புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனா். நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் பங்கேற்க உள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com