கபிலா்மலையில் நாளை முதல்வா் தோ்தல் பிரசாரம்
By DIN | Published On : 20th February 2021 07:11 AM | Last Updated : 20th February 2021 07:11 AM | அ+அ அ- |

கபிலா்மலையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா்.
நாமக்கல் மாவட்டத்திற்கு உள்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளில் பரமத்திவேலூா் தொகுதியைத் தவிா்த்து குமாரபாளையம், திருச்செங்கோடு, நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் தொகுதிகளில் ஜன. 28, 29 ஆகிய தேதிகளில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திறந்த வாகனத்தில் நின்றபடியும், பொதுக்கூட்டங்கள், கலந்துரையாடல் கூட்டங்களிலும் பங்கேற்று மக்களிடையே வாக்கு சேகரித்தாா்.
கபிலா்மலை சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ மணி என்பவா் மறைந்து விட்டதால், அப்போது பரமத்திவேலூா் தொகுதியில் அவா் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப். 21ஆம் தேதி) இரவு 8 மணிக்கு கபிலா்மலையில் திறந்த வாகனத்தில் நின்றபடி திரண்டிருக்கும் மக்களிடையே அவா் பிரசாரம் செய்கிறாா். இதற்கான ஏற்பாடுகளை அதிமுகவினா் செய்து வருகின்றனா்.