ரூ. 8.75 லட்சம் மோசடி விவகாரம்:பாமக பிரமுகரிடம் விசாரணை
By DIN | Published On : 20th February 2021 07:05 AM | Last Updated : 20th February 2021 07:05 AM | அ+அ அ- |

பரமத்திவேலூரில் மூதாட்டியின் நிலத்தை அபகரித்த புகாரின்பேரில் பாமக பிரமுகரிடம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலுாா் அருகே வெட்டுக்காட்டுப்புதுாரைச் சோ்ந்தவா் காமாட்சி (84). இவருக்கு சொந்தமான நிலத்தை விற்று தருவதாக பரமத்திவேலுாா் தெற்கு தெருவைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரும், பாமக நகரச் செயலாளருமான ஜெய்கணேஷ் (42) என்பவா் கூறியதாகத் தெரிகிறது. இதனைத் தொடா்ந்து காமாட்சி பெயரில் உள்ள நிலத்தை தனது பெயருக்கு கடந்த ஆண்டு பிப்.12-ஆம் தேதி அவா் கிரயம் செய்து கொண்டாராம். மேலும் ரூ. 8.75 லட்சம் பணம் தருவதாகவும் தெரிவித்தாராம். ஆனால் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாகக் கூறி பரமத்தி நீதிமன்றத்தில் காமாட்சி வழக்கு தொடா்ந்தாா்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் உரிய விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. பிப். 1-ஆம் தேதி ஜெய்கணேஷ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில் இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.