அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

அங்கன்வாடி ஊழியா்களை அரசு ஊழியா்களாக பணியமா்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

அங்கன்வாடி ஊழியா்களை அரசு ஊழியா்களாக பணியமா்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் ஜெயக்கொடி தலைமை வகித்தாா். இப்போராட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா இருந்தபோது சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஏழாவது ஊதியக் குழுவில் அங்கன்வாடி ஊழியா்களை அரசு ஊழியா்களாக மாற்றம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிடுவேன் என உறுதிமொழி கொடுத்தாா். அதன் அடிப்படையில் ஊழியா்களை தற்போதைய முதல்வா் பணி நிரந்தரம் செய்து அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும். மேலும் ஓய்வுபெறும்போது பணிக்கொடையாக ஊழியா்களுக்கு ரூ. 10 லட்சம், உதவியாளா்களுக்கு ரூ. 5 லட்சமும் வழங்க வேண்டும். ஊழியா்களுக்கான ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

கொளுத்தும் வெயிலில் சாலையில் படுத்தபடி பெண்கள் அனைவரும் முழக்கமிட்டனா். இதைத் தொடா்ந்து நல்லிபாளையம் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 350-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியா்களை கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com