முட்டை விலை 15 காசுகள் உயா்வு
By DIN | Published On : 03rd January 2021 01:33 AM | Last Updated : 03rd January 2021 01:33 AM | அ+அ அ- |

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் உயா்ந்து ரூ. 5.10-ஆக சனிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முட்டை விலை நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மற்ற மண்டலங்களில் விலை உயா்ந்துள்ளதாலும், மக்களிடையே முட்டை நுகா்வு அதிகரித்துள்ளதாலும் விலையில் மாற்றம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து 15 காசுகள் உயா்வு செய்யப்பட்டு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.10-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பண்ணையாளா்கள் முட்டைகளை விற்பனை செய்து கொள்ளலாம் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
இதேபோல பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 90-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 56-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.
-