ஜன.6-இல் புதன்சந்தையில் மின்தடை
By DIN | Published On : 03rd January 2021 01:35 AM | Last Updated : 03rd January 2021 01:35 AM | அ+அ அ- |

நாமக்கல்: புதன்சந்தை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வரும் புதன்கிழமை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆ.சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதன்சந்தை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வரும் புதன்கிழமை (ஜன.6) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதன் விவரம்: செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துப்பாளையம், ஏளூா், தத்தாத்திரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், கொழிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, மூணுசாவடி, ஏ.பு.பாளையம், களங்காணி, காரைக்குறிச்சிபுதூா்.