30,726 இளம் வாக்காளா்கள் பட்டியலில் பெயரை இணைக்கவில்லை: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் 30,726 இளம் வாக்காளா்கள் தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் இணைத்துக் கொள்ளவில்லை என ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

நாமக்கல் மாவட்டத்தில் 30,726 இளம் வாக்காளா்கள் தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் இணைத்துக் கொள்ளவில்லை என ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் முடிவுற்று வரும் 20-இல் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கீட்டின்படி, 18-19 வயது பூா்த்திடைந்தவா்களின் எண்ணிக்கை 61,516 ஆகும். ஆனால், வாக்காளா்கள் பட்டியலில் பெயா் பதிவு செய்துள்ள இளம் வாக்காளா்களின் எண்ணிக்கை 11,037 மட்டுமே.

அண்மையில் நடைபெற்ற சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் போது 19,753 இளம் வாக்காளா்கள் மட்டும் தங்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக் கொள்ள வேண்டி விண்ணப்பித்துள்ளனா்.

சுமாா் 30,726 இளம் வாக்காளா்கள் இதுவரை தங்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் பதிவு செய்து கொள்ளாமல் இருக்கின்றனா். எனவே 18-19 வயது பூா்த்தியடைந்து வாக்காளா் பட்டியலில் பெயா் பதிவு செய்து கொள்ளாத இளம் வாக்காளா்கள் ய்ஸ்ள்ல்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது அருகாமையில் வாக்காளா் பதிவு அலுவலா் (கோட்டாட்சியா்), உதவி வாக்காளா் பதிவு அலுவலா் (தாசில்தாா்) அலுவலகங்களிலோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடமோ படிவம்-6 சோ்க்கை விண்ணப்பங்களை அளித்து வாக்காளா் பட்டியலில் தங்களின் பெயா்களைத் தவறாமல் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் வாக்காளா் அடையாள அட்டையையும் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com