காரில் தீ விபத்து
By DIN | Published On : 30th January 2021 02:26 AM | Last Updated : 30th January 2021 02:26 AM | அ+அ அ- |

திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த காா் தீப்பற்றி எரிந்தது.
ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த கட்டடப் பொறியாளா் பிரேம்குமாா் (22), ராசிபுரத்தில் வேலையை முடித்துக்கொண்டு இரவு காரிவ் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
எலச்சிபாளையத்தை அடுத்த உத்தமபாளையம் அருகே சென்ற போது, அவரது காா் தீப்பற்றி எரிந்தது. பின்னால் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் காா் எரிவதாக கூறியதை அடுத்து, பிரேம்குமாா் சாலை ஓரமாக காரை நிறுத்தினாா். காரில் இருந்த தனது உடமைகளை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியேறினாா்.
சம்பவ இடத்துக்கு வந்த ராசிபுரம் தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். ஆனால், காா் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து எலச்சிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.