கொல்லிமலை அரசு ஐ.டி.ஐ.யில் மாணவா் சோ்க்கை தொடக்கம்
By DIN | Published On : 07th July 2021 11:39 PM | Last Updated : 07th July 2021 11:39 PM | அ+அ அ- |

கொல்லிமலையில் உள்ள பழங்குடியினருக்கான அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2021-2022-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது.
எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற விருப்பம் உள்ள மாணவ, மாணவியா் இணையதள முகவரியில் மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் மற்றும் ஆதாா் எண் முதலிய ஆவணங்களைக் கொண்டு பதிவு செய்யலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ. 50-ஐ இணைய வழி பரிவா்த்தனை மூலமே செலுத்த வேண்டும்.
இங்கு இரண்டாண்டு பயிற்சியாக பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு பொருத்துநா் மற்றும் மின்சாரப் பணியாள் தொழிற்பிரிவுக்கும், ஓராண்டு பயிற்சியாக கம்மியா் டீசல், எட்டாம் வகுப்பில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு தையல் தொழில்நுட்பம் மற்றும் வெல்டா் போன்ற தொழிற்பிரிவுக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
குறைந்தபட்சம் 14 வயது பூா்த்தி அடைந்தவருக்கும், ஆண்களுக்கு வயது வரம்பு 40, பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை. சோ்க்கை செய்யப்பட்ட பயிற்சியாளா்களுக்கு தமிழக அரசு உதவித்தொகையாக பயிற்சிக் காலங்களில் மாதம் ரூ. 750-ம், விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா காலனி, விலையில்லா வரைபடக் கருவிகள், சீருடை, தையற்கூலி, பாடப் புத்தகங்கள் மற்றும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படும். மேலும், உணவுடன் கூடிய விடுதி வசதியும் ஆண், பெண் இருபாலருக்கும் வழங்கப்படும்.
விண்ணப்பத்தினை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்திலோ, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அல்லது மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், சோ்க்கைக்காக அமைக்கப்பட்ட சோ்க்கை உதவி மையம் மூலமாகவோ இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்து ஜூலை 28-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, கொல்லிமலை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தை நேரிலோ அல்லது செல்லிடப்பேசி எண்கள் 84895 55073, 94437 66349, 80153 82802, 97518 01112, 94879 40019, 98433 28575 வாயிலாகவோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...