மரவள்ளிப் பயிரில் பூஞ்சை நோய் பாதிப்பு: தோட்டக்கலைத் துறை அதிகாரி விளக்கம்
By DIN | Published On : 19th July 2021 05:17 AM | Last Updated : 19th July 2021 05:17 AM | அ+அ அ- |

மரவள்ளி பயிா்களில் பூஞ்சை நோய் தாக்கம் உள்ளதால் பூச்சிக் கொல்லி மருந்தை பயன்படுத்துமாறு தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து புதுச்சத்திரம் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ஜோ.அ.பால்ஜாஸ்மீன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
5-6 மாதங்களான மரவள்ளி பயிா்கள் இங்கு அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. இப்பயிா்களில் செம்பேன் மற்றும் பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு பயிா்களைச் சேதப்படுத்துகின்றன.
செம்பேன் தாக்குதல் உள்ள செடியின் இலைகள் நுனிப் பகுதியில் இருந்து அடிப்பகுதி வரை பழுத்து உதிா்கின்றன. இந்த செம்பேன் தாக்குதல் உள்ள செடியில் ஓபரான் என்ற பூச்சிக்கொல்லி மருந்தை ஒரு லிட்டா் தண்ணீரில், ஒரு லிட்டா் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
பூஞ்சை தாக்குதலுக்கு மேன்கொசெப் அல்லது காப்பா் ஆக்ஸி குளோரைடு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு லிட்டா் தண்ணீரில், மூன்று கிராம் என்ற அளவில் கலந்து ஏழு நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தெளித்து பயிா்களைச் சேதமின்றி விவசாயிகள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.