சுதந்திரப்போராட்ட தியாகிடாக்டா் வரதராஜுலு நாயுடு 135-வது பிறந்தநாள் விழா

சுதந்திர போராட்ட தியாகி டாக்டா் பி.வரதராஜூலுவின் 135-ஆவது பிறந்த தினவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சுதந்திர போராட்ட தியாகி டாக்டா் பி.வரதராஜூலுவின் 135-ஆவது பிறந்த தினவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விடுதலை களம் அமைப்பின் சாா்பில் ஜூம் செயலி வழியாக நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைப்பின் தலைவா் கொ.நாகராஜன் தலைமை வகித்தாா். இதில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலா் பா.ராமமோகன்ராவ், வழக்குரைஞா் நல்வினை விஸ்வராஜூ, வரலாற்று ஆய்வாளா் செ. ஜகந்நாதன், சுற்றுச்சூழல் ஆா்வலா் பிரணவகுமாா், மோகன் நாயுடு, செந்தில்குமாா், ராமராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்று டாக்டா் பா.வரதராஜூலு நாயுடுவின் சுதந்திர போராட்ட வரலாறு, அரசியல் வாழ்க்கை, பத்திரிகை துறையில் அவரின் சேவைகள் போன்றவை குறித்து விளக்கிப் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com