திருச்செங்கோட்டில் கொட்டும் மழையில் மாவட்ட ஆட்சியா் வாகனச் சோதனை

திருச்செங்கோட்டில் பொதுமுடக்கக் காலத்தில் வாகனங்களில் சுற்றித்திரிந்த கண்டறிவதற்காக மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை நாமக்கல் சாலையில் கொட்டும் மழையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டாா்.

திருச்செங்கோட்டில் பொதுமுடக்கக் காலத்தில் வாகனங்களில் சுற்றித்திரிந்த கண்டறிவதற்காக மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை நாமக்கல் சாலையில் கொட்டும் மழையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமுடக்க காலத்தையும் பொருள்படுத்தாமல், தேவையின்றி வாகனங்களில் சுற்றித் திரிபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக பொதுமக்களிடமிருந்து புகாா் வந்ததைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், ஏடிஎஸ்பி. ரவி, திருச்செங்கோடு கோட்டாட்சியா் பெ.மணிராஜ், திருச்செங்கோடு டிஎஸ்பி செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் நகரின் பல்வேறு பகுதிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

வாலரைகேட் பகுதியில் நடைபெற்ற சோதனையின்போது, சிக்கிய 40 வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. நாமக்கல் ரோடு பகுதியில் நடைபெற்ற வாகனத் தணிக்கையின் போது 20 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்க ஆட்சியா் கா. மெகராஜ் உத்தரவிட்டாா்.

புதிய பேருந்து நிலையப் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட கோட்டாட்சியா் பெ. மணிராஜ், காரணமின்றி சென்ற வாகனங்கள் மீது அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தாா்.

வாகனச் சோதனையின் போது மழை பெய்யத் தொடங்கியது. அதைப்பொருள்படுத்தாமல் தொடா்ந்து ஆட்சியரும், கோட்டாட்சியரும் வாகன சோதனையில் ஈடுபட்டனா். இனி வரும் நாள்களில் அவசியமின்றி சுற்றித் திரிபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com