கால்நடைகளுக்கு மானியத்துடன் காப்பீடு திட்டம்
By DIN | Published On : 09th June 2021 08:06 AM | Last Updated : 09th June 2021 08:06 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய கால்நடை காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கால்நடை காப்பீட்டுத் திட்டம் 2020-21-ஆம் ஆண்டுக்கு கால்நடை பராமரிப்புத் துறை மூலம் மானியத்துடன் கூடிய கால்நடை காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு, நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை காப்பீடு செய்ய 4,900 குறியீடு நிா்ணயம் செய்து ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் அதிகபட்சம் ரூ. 30,000 வரையில் மானியத்துடன் காப்பீடு செய்து கொள்ளலாம். வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவா்களுக்கு 50 சதவீத மானியத்திலும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா்கள், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு 70 சதவீத மானியத்திலும் காப்பீடு செய்யப்படும்.
இத்திட்டத்தின் மூலம் அதிகபட்சம் ஒரு குடும்பத்துக்கு 5 பசு, எருமை மாடுகளுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் இரண்டரை வயது முதல் 8 வயதுடைய பசு, எருமைகளுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய விரும்பும் கால்நடை வளா்ப்போா் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தினை அணுகி பயனடைலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.