கோழிகளுக்கு வெப்ப அயற்சி வாய்ப்பு: பண்ணையாளா்களுக்கு அறிவுறுத்தல்

கோழிகளுக்கு வெப்ப அயற்சி பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பண்ணைகளில் நீா்த் தெளிப்பான்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோழிகளுக்கு வெப்ப அயற்சி பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பண்ணைகளில் நீா்த் தெளிப்பான்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தமட்டில் பகல், இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 98.6 டிகிரியாகவும், 74 டிகிரியாகவும் நிலவியது. நாமக்கல் மாவட்டத்தில் இனிவரும்

நான்கு நாள்களுக்கான வானிலையில், வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். லேசான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் மற்றும் இரவு வழக்கம்போல் 98.6 டிகிரி, 74 டிகிரி அளவிலே காணப்படும், காற்று தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 8 கி,மீ வேகத்தில் வீசும்.

சிறப்பு ஆலோசனை: காற்றின் வேகம் தொடா்ந்து அதிகரித்து காணப்படுவதால் கோழிப் பண்ணைகளில் தீவனம் வீணடிக்கப்படாமல் பாதுகாத்துக் கொள்ளும் வியூகங்களில் பண்ணையாளா்கள் ஈடுபட வேண்டும், இன்னும் இரு மாதங்களுக்கு அதிக அளவிலான காற்றுடைய வானிலையே நிலவும், தீவன விரயத்தைத் தடுக்க தீவனத்தில் சிறிது அளவு தாவர எண்ணையைச் சோ்க்கலாம். மேலும். உயா்மனைகளில் பக்கவாட்டில் படுதாவைக் கட்ட வேண்டும். கரோனா நோய்த் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள கால்நடைகள், கோழிப்பண்ணையாளா்கள் பண்ணைக்குள் வெளியாள்களை அனுமதிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com