செவிலியா் பயிற்சி முகாம்
By DIN | Published On : 20th June 2021 02:59 AM | Last Updated : 20th June 2021 02:59 AM | அ+அ அ- |

வையப்பமலையில் கரோனா முன்களப் பணியாா்களுக்கான இலவச செவிலியா் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது .
அரசு மருத்துவமனையில் பிரதம மந்திரி திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் சாா்பில் நடைபெற்ற முன்களப் பணியாளா்களுக்கான இலவச செவிலியா் பயிற்சி முகாமில், மல்லசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் சண்முகப்பிரியா முன்னிலை வகித்தாா்., அறக்கட்டளை பொறுப்பாளா்கள் பூபதி, முருகன் அா்ஜுனன் மற்றும் செவிலியா்கள் சுகாதார ஆய்வாளா் உட்பட பலா் கலந்து கொண்டனா்.