பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 29th June 2021 01:14 AM | Last Updated : 29th June 2021 01:14 AM | அ+அ அ- |

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிராக நாமக்கல் பூங்கா சாலையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.
நாமக்கல்: பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, நாமக்கல் பூங்கா சாலையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து நடத்திய இந்த ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலையை குறைக்கவும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் இன்னும் 6 மாதங்களுக்கு ரூ.7500 கரோனா நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளா் பழ. மணிமாறன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் எஸ்.கந்தசாமி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் குழந்தான் மற்றும் கட்சிகளின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.