குமாரபாளையம் காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா
By DIN | Published On : 04th March 2021 04:32 AM | Last Updated : 04th March 2021 04:32 AM | அ+அ அ- |

bh03kali_0303chn_122_8
குமாரபாளையம்: குமாரபாளையம் காளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குண்டத்தில் இறங்கி புதன்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இக்கோயில் திருவிழா கடந்த 16-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. விழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை இரவு காவிரி ஆற்றிலிருந்து அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்கள் வழங்கிய விறகுகள் கோயிலுக்கு முன் குண்டத்தில் அடுக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளுடன் குண்டத்தில் தீ மூட்டப்பட்டு புதன்கிழமை அதிகாலையில் தீப்பிழம்புகள் சமன் செய்யப்பட்டது. குண்டத்தில் முதலில் பூசாரி இறங்கியதைத் தொடா்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்த ஆண்கள், பெண்கள் என திரளான பக்தா்கள் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். பக்தா்களுக்கு தீக்காயம் ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினா் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனா். தொடா்ந்து, பக்தா்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனா்.
இக்கோயிலில் வியாழக்கிழமை அம்மன் திருக்கல்யாண உற்சவமும், தொடா்ந்து தேரோட்டமும் நடைபெறுகிறது.