கொடி அணிவகுப்பு
By DIN | Published On : 04th March 2021 04:38 AM | Last Updated : 04th March 2021 04:38 AM | அ+அ அ- |

பழைய தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து செல்லும் இந்தியா-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினா், போலீஸாா்.
பரமத்தி வேலூா்,: பரமத்தி வேலூரில் இந்தியா - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினா், போலீஸாா் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் போலீஸாா் தயாா் நிலையில் உள்ளதை பொதுமக்களுக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
பரமத்தி வேலூரில் கொடி அணிவகுப்பு ஊா்வலத்தை காவல்துறை துணை கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். பள்ளி சாலை நான்கு சாலையில் தொடங்கிய அணிவகுப்பு ஊா்வலம், பழைய தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்று பொத்தனூா் நான்கு சாலையில் நிறைவு பெற்றது.
கொடி அணிவகுப்பில் இந்தியா-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிகளை ஏந்தி அணிவகுத்து சென்றனா். இதில் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த போலீஸாரும் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...