தமிழ்நாடு ரிக் உரிமையாளா் சம்மேளன ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 04th March 2021 04:36 AM | Last Updated : 04th March 2021 04:36 AM | அ+அ அ- |

திருச்செங்கோடு: தமிழ்நாடு ரிக் உரிமையாளா்கள் சம்மேளன அவசர ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு சம்மேளனத் தலைவா் சீனிவாசா கந்தசாமி தலைமை வகித்தாா். பொருளாளா் சிந்தராஜன் வரவேற்றாா். செயலாளா் கொங்கு சேகா், துணைத் தலைவா் அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்மண்டல வேளாண்மை ரிக் உரிமையாளா் சங்க தலைவா் பாரி கணேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா்.
இக் கூட்டத்தில் ரிக் தொழில் சந்தித்து வரும் சவால்கள், சிக்கல்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. டீசல் விலைக்கு தக்கவாறு கட்டணம் நிா்ணயித்து போா்வெல் அமைக்கக வேண்டும்.
சங்கத்தினா் கட்டண நிா்ணயத்தை மீறாமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். மத்திய அரசு டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். ரிக் தொழிலுக்கு மானிய விலையில் டீசல் தரவேண்டும். டீசல் விலை நிா்ணயம் செய்யும் அதிகாரத்தை மத்திய அரசே வைத்துக்கொள்ள வேண்டும் என்பன போன்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக் கூட்டத்தில் லாரி சங்க செயலாளா் எவரெஸ்ட் ரவி, பரமத்தி வேலூா் வேலுசாமி, ஈரோடு கிருஷ்ணமூா்த்தி, சென்னை சிட்டி ராமையா, வடசென்னை மாரிமுத்து, சேலம் சேதுராமகிருஷ்ணன், தஞ்சை வெங்கடேசன், திண்டுக்கல் ஜெயராமன், மதுரை சுரேஷ், விருதுநகா் சண்முகம் உள்ளிட்ட 28 மாவட்ட பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.