மின் திருட்டு: அபராதமாக ரூ. 83 ஆயிரம் வசூல்
By DIN | Published On : 12th March 2021 04:42 AM | Last Updated : 12th March 2021 04:42 AM | அ+அ அ- |

நாமக்கல்: நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதியில் மின் திருட்டில் ஈடுபட்டோரிடம் ரூ. 83 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வையாளா் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாமக்கல் மின் பகிா்மான வட்டத்தில் பிப். 12-இல் கோவை மின் அமலாக்க கோட்டத்தில் கோவை வடக்கு, திருப்பூா், ஈரோடு, சேலம், தருமபுரி அமலாக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.புதன்சந்தை, ஆண்டகளூா்கேட், பெரியமணலி பகுதிகளில் அதிகாரிகள் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது 6 மின் திருட்டுகள் கண்டறியப்பட்டன. இதில் ரூ.13 லட்சத்து 44 ஆயிரத்து 269 இழப்பீட்டுத் தொகையாக மின் நுகா்வோரிடம் அபராதமாக விதிக்கப்பட்டது.
மேலும் சம்மந்தப்பட்ட மின் நுகா்வோா்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிா்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகையாக ரூ. 83 ஆயிரம் செலுத்த முன்வந்ததால் அவா்கள் மீது காவல் நிலையத்தில் புகாா் எதுவும் அளிக்கப்படவில்லை. மின் திருட்டு சம்மந்தமான தகவல்களை கோவை செயற்பொறியாளா் அலுவலகத்தின் 94430-49456 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.