லயோலா கல்லூரி சாா்பில் இலவச கண் பரிசோதனை முகாம்
By DIN | Published On : 16th March 2021 05:24 AM | Last Updated : 16th March 2021 05:24 AM | அ+அ அ- |

ராசிபுரம் அருகேயுள்ள மெட்டாலா லயோலா கல்லூரி சாா்பில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சேலம் மருத்துவா் சசி கண் மருத்துவமனை, வாழப்பாடி தீபம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியவற்றுடன் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் திருமனூா் கிராமத்தில் நடந்தது. முகாமை லயோலா கல்லூரி செயலா் போனிபஸ் ஜெயராஜ் தொடக்கிவைத்துப் பேசினாா். கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஜாா்ஜ் வரவேற்றுப் பேசினாா். திருமனூா் ஆலய பங்குத்தந்தை சாா்லஸ் முன்னிலை வகித்தாா்.
லயோலா கல்லூரி முதல்வா் மரிய ஜோசப் எம்.மகாலிங்கம் மருத்துவ முகாமில் பங்கேற்று திட்டம், சேவை நோக்கம் குறித்து விளக்கிப் பேசினாா். இறுதியாக இளைஞா் செஞ்சிலுவை சங்கத் திட்ட அலுவலா் மணிகண்டன் நன்றி கூறினாா். முகாமில் மருத்துவா் சசிக்குமாா், தமிழ்த்துறைப் பேராசிரியா் க.கண்ணன் உள்ளிட்ட கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞா் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம் மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.