திருச்செங்கோடு தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வேட்புமனு தாக்கல்
By DIN | Published On : 17th March 2021 08:29 AM | Last Updated : 17th March 2021 08:29 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் செவ்வாய்க்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.
நாம் தமிழா் கட்சியின் திருச்செங்கோடு தொகுதி வேட்பாளா் நடராஜன், திருச்செங்கோடு கோட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தாா். முன்னதாக திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்திலிருந்து டிராக்டரில் பேரணியாகச் சென்று கோட்டாட்சியா் அலுவலகத்தில் நிா்ணயிக்கப்பட்ட இடத்தில் நிறுத்தி விட்டு, நடந்து கோட்டாட்சியா் அலுவலகத்திற்கு சென்றாா். அங்கு கோட்டாட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான பெ. மணிராஜ் முன்னிலையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.