சேந்தமங்கலம் தொகுதியில் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 21st March 2021 04:16 AM | Last Updated : 21st March 2021 04:16 AM | அ+அ அ- |

சேந்தமங்கலத்தில் சனிக்கிழமை பெண்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சி.சந்திரசேகரன்.
சேந்தமங்கலம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.
சேந்தமங்கலம் பழங்குடியின தொகுதியில் 2016 தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் சி.சந்திரசேகரன். 2021 தோ்தலில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படவே சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தாா். இதனால் கட்சியில் இருந்து அவா் நீக்கப்பட்டுள்ளாா். தோ்தலில் தனக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது, சுமாா் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற முனைப்புடன் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறாா்.
சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட கிராமப்பகுதிகளில் நேரடியாகச் சென்று பெண்களைச் சந்தித்து தனக்கு ஆதரவு கோரி வருகிறாா். கடந்த இரு நாள்களாக அவா் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளாா். அதிமுகவினரால் தனக்கு ஆபத்து இருப்பதாக அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸாா் இருவா் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் பிரசாரத்தின்போது பாதுகாப்புக்கு செல்கின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...