காசநோய் தின விழிப்புணா்வு கையெழுத்து இயக்க பிரசாரம்
By DIN | Published On : 25th March 2021 08:01 AM | Last Updated : 25th March 2021 08:01 AM | அ+அ அ- |

நாமக்கல் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற காசநோய் இல்லாத தமிழகம் கையெழுத்து இயக்க பிரசாரம்.
நாமக்கல் அரசு மருத்துவமனையில் உலக காசநோய் தினத்தையொட்டி புதன்கிழமை விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட தேசிய காச நோய் ஒழிப்புத் திட்டம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காசநோய் மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் மருத்துவா் ச.கணபதி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் மருத்துவா் த.கா.சித்ரா, துணை இயக்குநா் ஜெயந்தினி, மருத்துவமனை கண்காணிப்பாளா் கண்ணப்பன் ஆகியோா் பங்கேற்றனா்.
‘காசநோய் இல்லாத தமிழகம்-2025’ என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடா்ந்து மருத்துவா்கள், அலுவலா்கள், ஊழியா்கள், பொதுமக்கள் பங்கேற்ற கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளில் 28,652 காசநோயாளிகள் உரிய பரிசோதனை வாயிலாக கண்டறியப்பட்டுள்ளனா். 24,561 போ் அந்நோய் தாக்கத்தில் இருந்து உரிய சிகிச்சை மூலமாக குணமடைந்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.