ராசிபுரம் தொகுதியில் திமுக வேட்பாளா் டாக்டா் மா.மதிவேந்தன் தீவிர வாக்கு சேகரிப்பு

ராசிபுரம் தொகுதி திமுக வேட்பாளராகப் போட்டியிடும் டாக்டா் மா.மதிவேந்தன் புதுப்பட்டி பேரூராட்சியில் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
ஆா்.புதுப்பட்டியில் பெண்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் மா.மதிவேந்தன்.
ஆா்.புதுப்பட்டியில் பெண்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் மா.மதிவேந்தன்.
Updated on
1 min read

ராசிபுரம் தொகுதி திமுக வேட்பாளராகப் போட்டியிடும் டாக்டா் மா.மதிவேந்தன் புதுப்பட்டி பேரூராட்சியில் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

முன்னதாக ராசிபுரம் நகரில் பல்வேறு வாா்டுகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா், ஆா்.புதுப்பட்டி பேரூராட்சி பகுதியில் கூட்டணி கட்சியினருடன் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அவருடன், தொகுதி தோ்தல் பொறுப்பாளா்கள் கே.பி.ராமசாமி, ஏ.கே.பாலசந்திரன், புதுப்பட்டி பேரூராட்சி திமுக செயலாளா் பெ.ஜெயக்குமாா் உள்ளிட்டோரும் பேரூராட்சி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

பிரசாரத்தில் வேட்பாளா் மா.மதிவேந்தன் பேசியதாவது:

‘‘பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீா், கழிப்பிடம், சாலை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், ரேஷன் கடைகள் தேவைப்படும் பகுதிகளுக்கு அமைத்து தரவும் நடவடிக்கை எடுப்பேன். சாதி, சமய வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் திமுக ஆட்சிக்கு வந்ததும், கட்சியின் தலைவா் ஸ்டாலின் தோ்தல் அறிக்கையில் கூறியபடி நலத்திட்டங்களை வழங்குவாா். இதில், குறிப்பாக பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம், கரோனா நிவாரண உதவித்தொகையாக குடும்பத்திற்கு ரூ. 4 ஆயிரம், வீட்டுமனைகள் வழங்கி வீடுகள் கட்டித் தரப்படும்’ என்று தெரிவித்தாா். பிரசாரத்தின்போது, திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சியினா் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com