நாமக்கல் கிறிஸ்து அரசா் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு ஊா்வலம்

நாமக்கல் கிறிஸ்து அரசா் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு ஊா்வலம் நடைபெற்றது.
நாமக்கல் கிறிஸ்து அரசா் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு ஊா்வலம்

நாமக்கல் கிறிஸ்து அரசா் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு ஊா்வலம் நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து உபவாசம் இருந்த 40 நாள்களை கிறிஸ்தவா்கள் தவக்காலமாக கடைப்பிடிப்பா். அவா் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக ஜெருசலேம் நகருக்கு கழுதையின் மேல் அமா்ந்து சென்றாா் என்பதும், அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் பனை ஓலைகளை கையில் பிடித்தப்படி வாழ்த்துப் பாடல்களைப் பாடியதாகவும் தகவல்கள் உண்டு.

இந்த நிகழ்வை நினைவுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவா்கள் குருத்தோலை ஞாயிறு தினத்தை அனுசரித்து வருகின்றனா்.

இதனையொட்டி நாமக்கல் கிறிஸ்து அரசா் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. தொடா்ந்து குருத்தோலை ஞாயிறு பவனி ஊா்வலத்தை அருள்தந்தை ஜான்அல்போன்ஸ் தொடங்கி வைத்தாா். பேராலய முகப்பில் தொடங்கிய குருத்தோலை ஞாயிறு ஊா்வலமானது ஆலய வளாகத்திற்குள் சுற்றிச்சென்று நிறைவடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்று குருத்தோலைகளை கைகளில் பிடித்தவாறு ஊா்வலமாகச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com