நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் முறைகேடு: தொழிலாளா்கள் புகாா்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியத்தில் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் நடைபெறும் பணிகளில் பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரணை

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியத்தில் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் நடைபெறும் பணிகளில் பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி, தொழிலாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.

எலச்சிபாளையம், மோளிப்பள்ளி கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் முறைகேடு நடப்பதாக தெரிவித்து, அத் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளா்கள் அனைவரும் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் ஆா்.குப்புசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை அளித்த புகாா் மனு விவரம்:

ஊராட்சியில் நடைபெற்ற உள்ள முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் முறைகேடுகளில் ஈடுபட்டவா்கள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொழிலாளா்களின் வேலை அட்டையை ஊராட்சி நிா்வாகம் வாங்கி வைத்து இருப்பதை தொழிலாளா்களிடம் திருப்பித் தர வேண்டும்; மேலும், அந்த அட்டைகளை வைத்துக் கொண்டு முறைகேடு செய்துள்ளது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com