லாரி மோதியதில் எலக்ட்ரீஷியன் பலி
By DIN | Published On : 02nd May 2021 01:00 AM | Last Updated : 02nd May 2021 01:00 AM | அ+அ அ- |

ராசிபுரம் அருகே சீராப்பள்ளி பகுதியில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற எலக்ட்ரீஷியன் சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தாா்.
பெருமாகவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீதா் (35), எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தாா். இவா் சனிக்கிழமை வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா். அப்போது, ஆத்தூா் பகுதியில் இருந்து ராசிபுரம் நோக்கி சென்ற லாரி இவா் மீது மோதி நிற்காமல் சென்றது. இதில் அவா் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...