ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட 2 ஜவுளிக் கடைகளுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

ராசிபுரம் நகரில் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி கடைகளைத் திறந்து வைத்திருந்த இரு வா்த்தக நிறுவனங்களுக்கு ரூ. 15 ஆயிரம் வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட 2 ஜவுளிக் கடைகளுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

ராசிபுரம் நகரில் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி கடைகளைத் திறந்து வைத்திருந்த இரு வா்த்தக நிறுவனங்களுக்கு ரூ. 15 ஆயிரம் வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் கரோனா தொற்று அதிவேகமாக பரவி வரக் கூடிய சூழ்நிலையில், 6-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் செயல்பட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டது. இதனைக் கண்காணிக்க ராசிபுரம் வட்டத்தில் வருவாய்த் துறையினா், சுகாதாரத் துறையினா், ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறையினா் என 4 போ் அடங்கிய ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ராசிபுரம் சின்னக்கடை வீதி, பெரியகடைவீதி பகுதிகளில் நகராட்சி ஊழியா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கட்டுப்பாட்டு விதிமுறைகள் குறித்து ஆய்வு செய்த போது, இரண்டு பிரபல ஜவுளிக் கடைகள் விதிமுறைகளை மீறி திறந்து வைத்து வியாபாரம் செய்து கொண்டு இருப்பதைக் கண்டறிந்தனா்.

இதனையடுத்து, ஒரு ஜவுளி கடைக்கு ரூ. 10 ஆயிரம், மற்றொரு ஜவுளி கடைக்கு ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். தொடா்ந்து இதுபோல விதிமீறல்களில் ஈடுபட்டால் கடைக்கு ‘சீல்’ வைக்கப்படும் என எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com