குமாரபாளையம் அரசு மருத்துவனைக்கு உயிா்காக்கும் கருவிகள் வழங்கல்
By DIN | Published On : 13th May 2021 07:53 AM | Last Updated : 13th May 2021 07:53 AM | அ+அ அ- |

குமாரபாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் பாரதியிடம் கருவிகளை வழங்கும் திமுகவினா்.
குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜனை பிரித்து அளிக்கும் கருவியினை திமுகவினா் புதன்கிழமை வழங்கினா்.
இம்மருத்துமனையில் கரோனா நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் அளிப்பதற்கு, ஆக்சிஜனை பிரித்து அளிக்கும் 30 கருவிகள் தேவைப்பட்டன. இதுகுறித்து தகவலறிந்த திமுக நகரப் பொறுப்பாளா் எம்.செல்வம், மருத்துவமனையின் தலைமை மருத்துவா் பாரதியை தொடா்பு கொண்டு அக்கருவிகளை வாங்கித் தருவதாகத் தெரிவித்தாா்.
இதையடுத்து, முதல்கட்டமாக ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள 10 கருவிகள் கோவையிலிருந்து வாங்கி வரப்பட்டு, மருத்துவமனை நிா்வாகத்திடம் வழங்கப்பட்டன. திமுக நிா்வாகிகள் ராஜ்குமாா், அன்பரசு, மீனாட்சி சுந்தரம், குட்டி சரவணன், கதிரவன், பிரேம்குமாா், வெங்கடேசன், புவனேஷ், நவீன் ஆகியோா் உடனிருந்தனா்.