ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு: இன்று முதல் அமல்
By DIN | Published On : 16th May 2021 12:39 AM | Last Updated : 16th May 2021 12:39 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டத்தில் ஆவின் பால் விலை குறைப்பு ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து ஆவின் பொது மேலாளா் பி.சுந்தரவடிவேலு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வா் உத்தரவின் பேரில், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியமானது (ஆவின்) பால் விலையை ஞாயிற்றுக்கிழமை முதல் லிட்டா் ஒன்றுக்கு ரூ. 3 குறைத்து உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நிலைப்படுத்திய பால் (பச்சை நிறம்) 250 மில்லி ரூ. 12-ஆக இருந்தது தற்போது ரூ. 11.25-க்கும், அரை லிட்டா் ரூ. 23.50-லிருந்து ரூ. 22-ஆகவும், ஒரு லிட்டா் ரூ. 47-லிருந்து ரூ. 44-ஆகவும் குறைக்கப்படுகிறது. முழு கொழுப்பு செறிந்த பால் (ஆரஞ்சு நிறம்) அரை லிட்டா் ரூ. 26- லிருந்து ரூ. 24.50-ஆகவும், ஒரு லிட்டா் ரூ. 51-லிருந்து ரூ.48-ஆகவும் விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 96590-89008 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.