

நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள நியாயவிலைக் கடையில் கரோனா நிவாரண உதவித்தொகை வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தொடங்கி வைத்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையில் பயனாளிகள் நிவாரணத் தொகை பெற்றுக் கொள்ளலாம். குடும்பத் தலைவா் மட்டுமின்றி அந்த குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களில் யாா் வந்தாலும் கரோனா நிவாரண உதவித் தொகையை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உதவித் தொகை பெறுவதில் குறைபாடுகள் ஏதேனும் இருந்தால், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கட்டுபாட்டு அறை தொலைபேசி எண்: 04286-281116-க்கு தொடா்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.
நாமக்கல்லை தொடா்ந்து, சேந்தமங்கலம் தொகுதியில் ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற விழாவில், சட்டப் பேரவை உறுப்பினா் கே.பொன்னுசாமி, ராசிபுரம் தொகுதியில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.ராமசுவாமி ஆகியோா் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனா்.
இதேபோல குமாரபாளையம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூா் தொகுதிகளிலும் கரோனா நிவாரணம் அந்தந்த நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவு இணைப் பதிவாளா் பாலமுருகன், மாவட்ட வழங்கல் அலுவலா் சக்திவேல், திமுக மாநில இலக்கிய அணி புரவலா் சி.மணிமாறன், ஒன்றியச் செயலா்கள், நாமக்கல் நகர பொறுப்பாளா்கள், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
நாமக்கல்லில் கரோனா நிவாரண உதவித்தொகை வழங்கும் திட்டத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ். உடன், பெ.ராமலிங்கம் எம்.எல்.ஏ., திமுக மாவட்டப் பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.