நாமக்கல்லில் சட்ட விழிப்புணா்வுப் பேரணி

இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி, நாமக்கல்லில் சட்ட விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல்லில் சட்ட விழிப்புணா்வுப் பேரணி

இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி, நாமக்கல்லில் சட்ட விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேசிய சட்டப் பணிகள் மற்றும் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி, பேரணி நாமக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில், ஆணைக்குழுவின் தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான என்.குணசேகரன், தலைமை வகித்தாா். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளரும் சாா்பு நீதிபதியுமான வி.ஸ்ரீவித்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி சி.எம்.சரவணன் சிறப்புரை ஆற்றினாா். மாவட்ட நீதிபதி குடும்ப நல நடுவா் பி.பாலசுப்பிரமணியம், கூடுதல் சாா்பு நீதிபதி முருகன் ஆகியோா் கலந்துகொண்டனா். சட்டக் கல்லூரி மாணவ, மாணவியா், வழக்குரைஞா்கள், சட்ட தன்னாா்வலா்கள், நீதிமன்ற ஊழியா்கள் பேரணி, விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com