கலப்பட டீசல் பறிமுதல்: லாரி ஓட்டுநா் கைது

நாமக்கல் அருகே டேங்கா் லாரியில் கொண்டு செல்லப்பட்ட 3,000 லி. கலப்பட டீசல் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

நாமக்கல் அருகே டேங்கா் லாரியில் கொண்டு செல்லப்பட்ட 3,000 லி. கலப்பட டீசல் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

நாமக்கல் - துறையூா் சாலை, கொசவம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் குடிமைப்பொருள் வழங்கல் துறையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக சந்தேகத்துக்கு இடமான வகையில் சென்ற டேங்கா் லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது உரிமம், ஆவணங்கள் ஏதுமில்லை. மேலும், அதிக லாபத்துக்கு விற்பனை செய்வதற்காக சுமாா் 3,000 லி. கலப்பட டீசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, லாரி, கலப்பட டீசலை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், லாரி ஓட்டுநரான விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கொங்கரப்பட்டுவைச் சோ்ந்த அபிராமன் (31) என்பவரை கைது செய்தனா். தலைமறைவான கலப்பட டீசலை விற்பனைக்கு அனுப்பிய கொசவம்பட்டியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com