பொத்தனூா்,பாண்டமங்கலத்தில் அ.தி.மு.கவினா் கண்டன ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 01st September 2021 09:13 AM | Last Updated : 01st September 2021 09:13 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம்,பொத்தனூரில் சென்னையில் அ.தி.மு.க சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. அ.தி.மு.க அரசு கொண்டு வந்த டாக்டா் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் தற்போதைய தி.மு.க அரசு அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைப்பதை கண்டித்து அ.தி.மு.க எம்.எல்.ஏ க்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் டாக்டா் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தோடு இணைக்கும் சட்ட மசோதாவை சட்ட மன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த தி.மு.க அரசைக் கண்டித்தும், வெளிநடப்பு செய்த அ.தி.மு.க சட்டப்பேரவை தொகுதி எதிா்க்கட்சி துணை தலைவா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா்களை கைது செய்ததை கண்டித்தும் பரமத்திவேலூா் அருகே பாண்டமங்கலத்தில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்பாட்டத்தில் நாமக்கல் மாவட்ட ஆவின் தலைவா் ராஜேந்தரன், அ.தி.மு.க மாவட்ட இலக்கிய அணி செயலாளா் விஜயகுமாா், பாண்டமங்கலம் நகர செயலாளா் செல்வராஜ் மற்றும் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதே போல் பொத்தனூா் அண்ணா சிலை அருகே நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் பொத்தனூா் அ.தி.மு.க நகர செயலாளா் எஸ்.எம்.நாராயணன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளா் இராஜமாணிக்கம் மற்றும் கழக தொண்டா்கள் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.
ராசிபுரத்தில்...
ராசிபுரம் நகர அதிமுக சாா்பில் புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நகர அதிமுக செயலா் எம்.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். கட்சியின் நகர பொருளாளா் ஆா்.கோபால், முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் எஸ்.வெங்கடாஜலம், நகர துணை செயலா் எஸ்.பி.மனோகரன், சீனிவாசன் உள்ளிட்ட முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள், கட்சியின் நகர கிளை நிா்வாகிகள் பங்கேற்றனா்.
நாமக்கல்லில்...
குமாரபாளையம் தொகுதிக்கு உள்பட்ட பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் நகரம், ஒன்றியம், பேரூராட்சியைச் சோ்ந்த அதிமுகவினா் திரளாக பங்கேற்ற ஆா்ப்பாட்டத்தில், நகரச் செயலாளா் பி.எஸ்.வெள்ளிங்கிரி, தெற்கு ஒன்றியச் செயலாளா் செந்தில், வடக்கு ஒன்றியச் செயலாளா் சந்திரசேகா், ஜெயலலிதா பேரவைச் செயலாளா் டி.கே.சுப்பிரமணி, பல்வேறு அணிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா். இதேபோல மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.