ரூ. 31 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
By DIN | Published On : 01st September 2021 09:10 AM | Last Updated : 01st September 2021 09:10 AM | அ+அ அ- |

நாமக்கல் வேளாண் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 31 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெறும். நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வருவா். அதன்படி நடைபெற்ற ஏலத்தில், 1,300 மூட்டைகள் பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்.சி.ஹெச். ரகம் ரூ. 7,300 முதல் ரூ. 7.850 வரையிலும், சுரபி ரகம் ரூ. 8,505 முதல் ரூ. 9,805 வரையிலும், மட்ட ரகம் ரூ. 3,905 முதல் ரூ. 5,699 வரையிலும் விலை போனது. மொத்தம் ரூ. 31 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.