நாமக்கல் அரசுக் கல்லூரியில் ரத்த தான விழிப்புணா்வு
By DIN | Published On : 16th September 2021 11:42 PM | Last Updated : 16th September 2021 11:42 PM | அ+அ அ- |

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி எச்ஐவி, எய்ட்ஸ், காசநோய் மற்றும் ரத்த தானம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
இதில், கல்லூரி முதல்வா் பெ. முருகன் தலைமை வகித்து விழிப்புணா்வு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ரத்த வங்கி அலுவலா் மருத்துவா் அன்புமலா் பங்கேற்று ரத்த தானம் செய்வதன் அவசியம், தேவை மற்றும் பயன்கள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் சாா்பில் காசநோய் விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டது. இதில், மாவட்ட சுகாதார நலக் கல்வியாளா் ராமச்சந்திரன், காசநோயின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றி பேசினாா். எச்.ஐ.வி, எய்ட்ஸ் விழிப்புணா்வு பற்றி நாமக்கல் ஆரம்ப சுகாதார நம்பிக்கை மைய ஆலோசகா் ஜான்சி பேசினாா். இதில், விலங்கியல் துறை உதவிப் பேராசிரியா் சேகா் மற்றும் கல்லூரிப் பேராசிரியா்கள், இரண்டாம் ஆண்டு விலங்கியல் மற்றும் கணிதத் துறை மாணவ மாணவியா் கலந்துக் கொண்டனா். முடிவில் தாவரவியல் துறை உதவிப் பேராசிரியா் வெஸ்லி நன்றி கூறினாா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி செஞ்சுருள் சங்கத் திட்ட அலுவலா் ம. சந்திரசேகரன் செய்திருந்தாா்.