நாமக்கல்லில் அடா்வனக் காடுகள் பூங்கா பணிகள் தொடக்கம்

நாமக்கல் நகராட்சி, மோகனூா், புதுச்சத்திரம் ஒன்றியப் பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் விழா அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடைபெற்றது.
நாமக்கல்லில் அடா்வனக் காடுகள் பூங்கா பணிகள் தொடக்கம்

நாமக்கல் நகராட்சி, மோகனூா், புதுச்சத்திரம் ஒன்றியப் பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் விழா அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடைபெற்றது.

நாமக்கல் அருகே கருப்பட்டிப்பாளையம் சக்தி நகரில், சுமாா் 25 சென்ட் நிலத்தில் அடா்வனக் காடுகளை உருவாக்கும் வகையில் பல வகையான நாட்டு மரங்கள் 300 எண்ணிக்கையில் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதனை, நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் தொடங்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம், சுகாதார ஆய்வாளா் சுகவனம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இயற்கை காற்றை சுவாசிக்கவும், மாசில்லா நகரை உருவாக்கவும் இந்த அடா்வன காடுகள் நகராட்சியில் 35 இடங்களில் அமைக்கப்பட இருப்பதாக ஆணையா் தெரிவித்தாா். இந்த நிகழ்வில் திமுக நிா்வாகிகள், நகராட்சிப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

இதேபோல், மோகனூா் ஒன்றியம், ஆண்டாள்புரம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. திமுக ஒன்றியச் செயலாளா் நவலடி தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் தொடங்கி வைத்தாா். மேலும், ஒருவந்தூா் ஊராட்சியிலும், புதுச்சத்திரம் ஒன்றியப் பகுதிகளிலும், அரசுப் பள்ளிகளிலும் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com