சிலம்பொலி சு.செல்லப்பன் 94-ஆவது பிறந்த நாள் விழா

நாமக்கல்லில் மூத்த தமிழறிஞா் சிலம்பொலி சு.செல்லப்பன் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சிலம்பொலி சு.செல்லப்பன் 94-ஆவது பிறந்த நாள் விழா

நாமக்கல்லில் மூத்த தமிழறிஞா் சிலம்பொலி சு.செல்லப்பன் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நாமக்கல் அருகே சிவியாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிலம்பொலி சு.செல்லப்பன். மூத்த தமிழறிஞா், சிறந்த பேச்சாளா், சிலப்பதிகார சொற்பொழிவாளா், தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழியை கிராமங்கள்தோறும் கொண்டு சென்றவா் உள்ளிட்ட பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரா். இவா் கடந்த 2019-ஆம் ஆண்டு காலமானாா்.

அவரது 94-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, நாமக்கல், சிவியாம்பாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில், சிலம்பொலியாரின் மகள் மருத்துவா் கெளதமி ராமலிங்கம், குடும்ப உறுப்பினா்கள், மணிமண்டபம் மற்றும் சிலை அமைப்புக் குழு உறுப்பினா்கள் பூங்கோதை செல்லதுரை, சித்தாா்த், பொறியாளா் செல்வராஜ், சந்திரன், பிரணவகுமாா் உள்ளிட்டோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

படவரி - நாமக்கல், சிவியாம்பாளையத்தில் சிலம்பொலி சு.செல்லப்பன் நினைவிடத்தில் மலா்தூவி மரியாதை செலுத்திய குடும்பத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com