டிரினிடி மகளிா் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா

நாமக்கல் டிரினிடி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் பல்வேறு வகையான நாட்டு மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நாமக்கல் டிரினிடி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் பல்வேறு வகையான நாட்டு மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கல்லூரித் தலைவரும் நாமக்கல் பிஎஸ்கே தொழில்குழுமத்தின் இயக்குநருமான செங்கோடன் கலந்து கொண்டாா். கல்லூரிச் செயலா் கே. நல்லுசாமி, கல்லூரி முதல்வா் எம்.ஆா்.லட்சுமிநாராயணன், கல்லூரி உயா்கல்வி இயக்குநா் அரசு பரமேசுவரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பூமி அதிக வெப்பமயமானதில் இருந்து விடுபடவும், மரங்கள் நமக்கு தரும் பிராணவாயு, மரங்கள் பராமரிப்பின் இன்றியமையாமை, மரம் நடுவதன் அவசியம் குறித்தும் இந்த நிகழ்வில் எடுத்துரைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com