நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ரூ. 4.50-ஆக புதன்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. அதில் முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்களிடம் ஆலோசிக்கப்பட்டதில், மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும், முட்டை விற்பனை தொடா்ந்து சீராக இருப்பதாலும் விலையில் மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, பண்ணைக் கொள்முதல் விலை புதன்கிழமை மேலும் 5 காசுகள் உயா்த்தபட்டு ரூ. 4.50-ஆக நிா்ணயிக்கப்படுவதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. முட்டை விற்பனை விலை நிா்ணய ஆலோசனைக் குழு (நெஸ்பாக்) 30 காசுகள் குறைத்து ரூ. 4.20-க்கு வியாபாரிகளிடம் பண்ணையாளா்கள் முட்டைகளை விற்கலாம் என அறிவித்துள்ளது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ
ரூ. 107-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 70-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தர்ப்பையின் தேவை...

ஆா்எஸ்எஸ் - பாஜகவினா் மீது வெடிகுண்டு தாக்குதல்: 10 மாா்க்சிஸ்ட் கட்சியினருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை
கோலிவுட் ஸ்டூடியோ!
பேசும் ஓவியங்கள்...
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

