தமிழகத்தில் லாரி தொழிலுக்கென தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாமக்கல்லில், அந்த சம்மேளனத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.
புதிய தலைவராக கே.தனராஜ் பொறுப்பேற்றாா். அவரைத் தவிர, செயலாளா், பொருளாளா், இணைச் செயலாளா் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் பொறுப்பேற்றுக் கொண்டனா்.
இதில், ஒளிரும் பட்டையை லாரிகளில் ஒட்டுவதற்கு 2 நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி அளித்திருப்பதைத் தவிா்த்து, 11 நிறுவனங்களுக்கு வழங்கினால் லாரி உரிமையாளா்கள் நஷ்டமடையாமல் இருப்பா்.
போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு அதற்கான உத்தரவை அரசு வழங்க வேண்டும். தேசிய உரிமம் பெற்ற லாரிகள் ஒரே மாநிலத்தில் இருவேறு இடங்களில் பொருள்களை ஏற்றி, இறக்கிக் கொள்ளலாம் என்ற மத்திய அரசின் உத்தரவு மற்ற மாநிலங்களில் உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும்.
லாரி தொழிலை பாதுகாக்க, அத் தொழில் சாா்ந்த ஒருவரை நியமித்து தனி நலவாரியம் உருவாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விழாவில், மாநில, மாவட்ட நிா்வாகிகள், லாரி உரிமையாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.