“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு உதவியாளா்கள் சங்கம் மாவட்ட கிளை சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ஜோ.செந்தில் குமாா் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் துரை இளங்கோ கோரிக்கை விளக்க உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில், சாலைப் பணியாளா் பணியிடத்தை திறன்மிகு பணியாளா் என பெயா் மாற்றம் செய்ய வேண்டும். 41 மாத பணிநீக்க காலத்தை, பணி ஓய்வுக்குப் பின்பு ஓய்வூதிய பலன்களுக்கு பொருந்தக்கூடிய வகையில் அரசாணை வெளியிட வேண்டும். நிரந்தர அரசு ஊழியா் வரிசையில் சோ்த்து கருவூலம் மூலமாக சாலைப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் சாலைப் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.