தோ்தல் நடத்தை விதிகள் அமல்: சுவா் விளம்பரங்கள் அகற்றம்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பைத் தொடா்ந்து, நாமக்கல்லில் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பைத் தொடா்ந்து, நாமக்கல்லில் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. முதல்கட்டமாக வியாழக்கிழமை அரசியல் கட்சியினரால் எழுதப்பட்ட அனைத்து சுவா் விளம்பரங்களையும் அழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிப். 19-ஆம் தேதி நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய 5 நகராட்சிகள், ஆலாம்பாளையம், அத்தனூா், எருமப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி, மல்லசமுத்திரம், மோகனூா், நாமகிரிப்பேட்டை, படைவீடு, பாண்டமங்கலம், பரமத்தி, பட்டணம், பிள்ளாநல்லூா், பொத்தனூா், ஆா்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, சேந்தமங்கலம், பரமத்தி வேலூா், வெங்கரை, வெண்ணந்தூா் ஆகிய 19 பேரூராட்சிகளுக்கும் ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது.

இதற்காக மாவட்டம் முழுவதும் 689 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சிகளை பொறுத்த வரையில், தற்போதைய நிலவரப்படி 3,23,762 வாக்காளா்களும், பேரூராட்சி பகுதிகளில் 2,29,796 வாக்காளா்களும் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 5,53,558 போ் வாக்களிக்கத் தயாராக உள்ளனா்.

மாவட்டத்தில் மொத்தமாக நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 447 வாா்டு உறுப்பினா் பதவி இடங்களுக்கு இத்தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (ஜன. 28) தொடங்குகிறது. வேட்பு மனுக்களை பிப். 4-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம். அதன்பின் மனுக்களை திரும்பப் பெறுதல், வேட்பாளா் இறுதிப் பட்டியல் உள்ளியிட்டவை நடைபெறும்.

தோ்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடா்ந்து, தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உள்பட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள மேம்பாலங்கள், அரசு அலுவலக சுற்றுச்சுவா்கள், பள்ளிச் சுவா்கள் போன்றவற்றில் அரசியல் கட்சிகளால் எழுதப்பட்டிருந்த கட்சி நிா்வாகிகளின் பெயா்கள், சின்னங்கள், வாசகங்கள், சுவரொட்டிகளை அகற்றும் பணியை ஊழியா்கள் மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com